Skip to main content

நேற்று பாய்ஸ் லாக்கர் ரூம்... இன்று கேர்ள்ஸ் லாக்கர் ரூம்... இளைய தலைமுறையை காவு வாங்கும் இணையம்...

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

bois locker room and girls locker room issue

 

டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற பெயரில் உள்ள குழுவில் சக மாணவிகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது குறித்தும் சேட் செய்தது, நேற்று இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று இதேபோல பெண்கள் குழுவில் பேசிக்கொண்டதாக சில ஸ்க்ரீன்ஷாட்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


தெற்கு டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் சில 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற பெயரிலான அந்த இன்ஸ்டாகிராம் குழுவில், தங்களுடன் படிக்கும் பெண்களின் புகைப்படங்களை மார்ஃப் செய்து பதிவுகள் இட்டதுடன், கூட்டு பாலியல் வன்புணர்வு குறித்தும் பேசியுள்ளனர். இந்த சேட்களின் ஸ்க்ரீன்ஷாட்கள் நேற்று இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், மாணவன் ஒருவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், டெல்லியில் 4 பள்ளிகளில் படிக்கும் சுமார் 20 மாணவர்கள் இதில் தொடர்புடையவர்களாக தற்போது கண்டறியப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களின் பெற்றோர் அனைவருக்கும் தகவல் கொடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், இந்த மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த மாணவர்கள் அனைவருமே 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பிடிபட்ட மாணவனின் மொபைல் போனை டெல்லி காவல்துறையின் சைபர் செல் பறிமுதல் செய்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இதேபோல பெண்கள் குழு ஒன்றில் ஆண்களை பற்றி பேசிய உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளவும் போலீஸாருக்கு கோரிக்கைகள் எழுந்துவரும் சூழலில், ஆண், பெண் பேதமின்றி இளைய தலைமுறையை இணையம் காவு வாங்கி வருவது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்