அவதூறு ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையாக பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 31ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக வன்முறையை தூண்டும் வகையில்பேசிய அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.