Advertisment

தமிழகத்தைப் போல ஆந்திராவில் பா.ஜ.க.வால் நாடகம் நடத்த முடியவில்லை! - சந்திரபாபு நாயுடு

தமிழகத்தைப் போல ஆந்திர மாநிலத்திலும் பா.ஜ.க.வால் நடத்தமுடியவில்லை என சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

ChandraBabu

ஜனசேனா கட்சியின் நான்காவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர், ஆந்திர முதல்வர் மற்றும் அவரது மகன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மாநிலம் பிரிக்கப்பட்ட பின் இங்கு ஊழல் பரவிக்கிடக்கிறது என குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள சந்திரபாபு நாயுடு, ‘என்மீது வைக்கப்படும் எந்தக் குற்றச்சாட்டும், விமர்சனமும் எனக்கு ஆசிர்வாதம் போலவே இருக்கிறது. ஜனசேனா கட்சியின் தலைவர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் அவராக பேசவில்லை. டெல்லியில் இருந்து பா.ஜ.க. எழுதித்தருவதைத் தான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல ஆந்திராவில் நாடகம் நடத்தமுடியவில்லை. மாநில நலனுக்காக நாம் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், யாரும் எதற்காகவும் உணர்ச்சிவசப் படவேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.

Chandra babu naidu Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe