big

Advertisment

பிக் பாஸ் நிகழ்ச்சி தென் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாகும். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு தமிழ் மொழியிலும் அறிமுகமாகி மக்கள் அனைவரையும் தொலைக்காட்சி முன்பு கட்டிப்போட்டு வைத்திருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு அடிமையாகியிருந்தார்கள்.

பிக் பாஸ் முதல் சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தொடக்கத்தில் கமல்ஹாசன் என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்க்கத் தொடங்கினர். பின்னர் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் காரணமாக தொடர்ந்து விடாமல் ரசிக்க ஆரம்பித்தனர். இதனால் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி முதலில் 60 லட்சம் பேர் மட்டுமே பார்ப்பார்கள் என்று எண்ணிய நிலையில் 5 கோடி பேரால் பார்க்கப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றது.

big boss 1

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்நிலையில், கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 2 இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. முதல் சீசனைப் போலவே இதற்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டின் செட், பூந்தமல்லியை அடுத்து ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வசதிகளும் அந்த வீட்டுக்குள்ளேயே இருக்கும். இந்தப் பிக் பாஸ் சீஸனிலும் அதே இடத்தில்தான் பிக்பாஸ் வீட்டின் செட் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்றே முடிந்து விட்டது. இந்நிலையில், முதல் சீசனில் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது' என்றபடி கமல் கூறியது வைரல் ஹிட் ஆன நிலையில் இந்த சீசனில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என கமல் கூறுகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் தற்போதே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் விவரங்களை அந்த தொலைக்காட்சி நிறுவனம் ரகசியமாகவே வைத்துள்ளது.

big

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில்,

1. யாஷிகா ஆனந்த் (திரைப்பட நடிகை)

2. பொன்னம்பலம் (வில்லன் நடிகர்)

3. மும்தாஜ் (திரைப்பட நடிகை)

4. தாடி பாலாஜி (திரைப்பட நடிகர்)

5. நித்யா (தாடி பாலாஜி மனைவி)

6. ஜனனி ஐயர் (திரைப்பட நடிகை)

7. மமதி சாரி (தொகுப்பாளினி)

8. ஆனந்த் வைத்தியநாதன் (பாடகர்)

9. சென்ட்ராயன் (திரைப்பட நடிகர்)

10. மகத் (திரைப்பட நடிகர்)

11. ஐஸ்வர்யா தத்தா (திரைப்பட நடிகை)

12. டேனியல் ஆனி போப் (திரைப்பட நடிகர்)

13. ரித்விகா (திரைப்பட நடிகை)

14. ஷாரிக் கான் (நடிகர் ரியாஸகான் மகன்)

15. ரம்யா (NSK)

16. வைஷ்ணவி (ஆர்.ஜே)

b

என மொத்தம் 16 பிரபலங்கள் இந்த சீசன் 2வில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதனுடன் நடிகர் பவர்ஸ்டார் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளார். மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் சீசன் 1ல் பிரபலாமான காதல் ஜோடி நடிகை ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் வர இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.