Skip to main content

மீண்டும் பீலா ராஜேஷ்...? இவ்வளவு செல்வாக்கா எனக் கோட்டையில் பரபரப்பு!!!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

ddd

 

பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என நக்கீரன் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. "ஜெ.பாணியில் பங்களா கட்டிய பீலா ராஜேஷ்" என்ற நக்கீரனின் செய்தியையடுத்து மத்திய அரசு அதுபற்றி விசாரிக்குமாறு மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியது. 


அந்த கடிதத்தை தொடர்ந்து பீலாவின் கணவர் ராஜேஷை சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக எடப்பாடி அரசு நியமித்தது. அதேபோல, வணிக வரித்துறை செயலாளராக பீலா ராஜேஷை நியமித்தது. வணிக வரித்துறை செயலாளரான பிறகு பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஜோதி நிர்மலாவை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிட்டு, சங்கர் ஐ.ஏ.எஸ்.ஸை பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி.யாக தமிழக அரசு நியமித்துள்ளது. 

 

கணவர் ராஜேஷ் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக ஆனதற்கும், ஜோதி நிர்மலா மாற்றப்பட்டதற்கும் பீலா ராஜேஷ்தான் காரணம் என்கிறார்கள் ஐ.ஏ.எஸ் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். கோடிக்கணக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் ஒரு களங்கமாக அறியப்பட்ட பீலாவுக்கு இவ்வளவு செல்வாக்கா? என பேசிக் கொண்டிருக்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சார்ந்தவர்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம் (படங்கள்) 

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று (15.05.2023) கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

Next Story

என்எல்சி நிறுவனத்தின் நிலம்  கையகப்படுத்தும் விவகாரம்; ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்?

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

cuddalore neyveli nlc land issue gram sabha related panchayat secretary transfer issue 

 

கடந்த மே ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன நற்குணம், கத்தாழை, மேல் வளையமாதேவி, எறும்பூர், நெல்லி கொல்லை,கீழ் வளையமாதேவி ஆகிய ஊராட்சிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் மேற்படி ஆறு ஊராட்சி கிராம சபை கூட்டங்களிலும் கிராம மக்கள் தங்கள் ஊரில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த காரணத்தை முன்னிட்டு உயர் அதிகாரிகளின் தலையீட்டின் பேரில் மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மேற்படி ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி கற்றாழை ஊராட்சி செயலாளர் சிற்றரசு துரிஞ்சி கொல்லை ஊராட்சிக்கும், சின்ன நெற்குணம் ஊராட்சி செயலாளர் சசிகுமார் மேல் வளையமாதேவிக்கும்,  மேல் வளையமாதேவி ஊராட்சி செயலாளர் லீமா சின்ன நற்குணம் கிராமத்திற்கும், கீழ் வளையமாதேவி ஊராட்சி செயலாளர் லூர்து மேரி நெல்லி கொல்லை ஊராட்சிக்கும், அங்கு பணியாற்றி வந்த ஊராட்சி செயலாளர் பாலமுருகன் கத்தாழைக்கும் எறும்பூர் ஊராட்சி செயலாளர் பாலகணபதி காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த பணியிட மாற்றம் மாவட்ட மற்றும் மாநில அளவில் உள்ள ஊராட்சி செயலாளர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஊராட்சி செயலாளர்கள் கிராம சபை கூட்டங்களின் போது பெரும்பான்மை கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு தேவையான திட்டங்கள் தேவைகள் குறித்து மெஜாரிட்டி அடிப்படையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஊராட்சி பதிவேட்டில் பதிவு செய்வது ஊராட்சி செயலாளர்களின் பணி. இது எப்போதும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மேற்படி ஆறு ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு காரணம் என்எல்சிக்கு எதிராக கிராம மக்கள் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கொண்டுவரப்பட்ட தீர்மானமே காரணம் என்கிறார்கள் கிராம மக்கள்.