விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடக்கும் வாக்கு சாவடியில் ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுலவர் சந்திரசேகரன் அவர்கள் நிருபர்களிடம் கூறியது "இந்த தொகுதியில் மொத்தம் 275 வாக்கு சாவடிகள் அமைக்கபட்டுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vikravandi in.jpg)
காலை 7 மணி முதல் வாக்குகள் தெடங்கி நல்ல முறையில் நடந்து வருகிறது. காவல் துறையினர், துணை ராணுவத்தினர், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து வாக்கு சாவடியிலும் அடிப்படைவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது" என்று கூறினார்.மூன்று வாக்கு சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக தாமதமாக துவங்கியது என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு "இது போல் எங்கும் நடைபெறவில்லை" என்று தெரிவித்தார்.
Follow Us