Skip to main content

அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது - தேர்தல் அலுவலர்.

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடக்கும் வாக்கு சாவடியில் ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுலவர் சந்திரசேகரன் அவர்கள் நிருபர்களிடம் கூறியது "இந்த தொகுதியில் மொத்தம் 275 வாக்கு சாவடிகள் அமைக்கபட்டுள்ளன.
 

basic needs are taken care


காலை 7 மணி முதல் வாக்குகள் தெடங்கி நல்ல முறையில் நடந்து வருகிறது. காவல் துறையினர், துணை ராணுவத்தினர், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


அனைத்து வாக்கு சாவடியிலும் அடிப்படைவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது" என்று கூறினார். மூன்று வாக்கு சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக தாமதமாக துவங்கியது என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு "இது போல் எங்கும் நடைபெறவில்லை" என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரதமரின் வாகனப் பேரணி - ஏற்பாடுகள் தீவிரம்! (படங்கள்)

Published on 09/04/2024 | Edited on 09/04/2024

 

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகள், தேதி நெருங்கி விட்டதால் பிரச்சாரத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இன்று மாலை சென்னை வரும் பிரதமர், தியாகராயர் நகரில் பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார். அதைமுன்னிட்டு அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.