Advertisment

திமிராக பேசிய அந்த வங்கி மேலாளரை இந்தி பேசும் மாநிலத்திற்கு விரட்டியடிக்க வேண்டும்! -ராமதாஸ் கண்டனம்

ramadoss

இந்தி தெரியாவிட்டால் கடன் வழங்க முடியாது என்று திமிராக கூறிய வங்கி மேலாளர் தமிழகத்தில் பணியாற்ற தகுதியற்றவர் இந்தி தெரியாது என்பதற்காக கடன் வழங்க மறுப்பதா? வங்கி மேலாளர் மீது கடும் நடவடிக்கை தேவை! -ராமதாஸ் கண்டனம்

Advertisment

இந்தி தெரியாது என்பதற்காக கடன் வழங்க மறுப்பதா என கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அந்த வங்கி மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்தி தெரியவில்லை என்பதற்காக ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவருக்கு கடன் வழங்க முடியாது என்று பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த மேலாளர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலாளர் மீது கடும் நடவடிக்கை தேவை!

தமிழ்நாட்டில் வங்கியில் பணியாற்றிக் கொண்டு இந்தி தெரியாவிட்டால் கடன் வழங்க முடியாது என்று திமிராக கூறிய வங்கி மேலாளர் தமிழகத்தில் பணியாற்ற தகுதியற்றவர். உடனடியாக அவரை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலத்திற்கு வங்கி நிர்வாகம் விரட்டியடிக்க வேண்டும்!

மத்திய அரசுத்துறை அலுவலங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை அரசு செவிமடுக்காததன் விளைவு தான் இத்தகைய கூத்துகள். இனியாவது நிலைமை மாற வேண்டும்!'' இவ்வாறு கூறியுள்ளார்.

jayankondam bank hindi Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe