Advertisment

கடன் தொல்லை! எஸ்.ஐ. தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை..! 

 police SI

சென்னை, தியாகராஜர் நகர் ராமானுஜம் தெருவில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அமைப்பின் தலைவராக வேதாந்தம் பதவி வகித்து வருகிறார். இவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக (பர்ஸ்னல் செக்யூரிட்டியாக) இருந்து வந்த எஸ்.ஐ. சேகர், வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர். 47 வயதாகும் இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் ஒரு மகன் மற்றும் 14 வயதில் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இங்கு வேலை பார்த்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நேற்று திடீரென இவர் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக் கொண்டார். நெற்றியில் துப்பாகியை வைத்து சுட்டுக் கொண்டதில், சேகர் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சத்தம் கேட்டுதான் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்,அங்கிருந்த ஊழியர்கள் அலறி துடித்தனர். உடனடியாக மாம்பலம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அவர்களும் விரைந்து வந்தனர். அங்கு பணியில் ஈடுபடும் போலீஸார் தங்குகி ஓய்வெடுக்க, இந்த ஆபீசுக்கு பின்பக்கம் ரூம் உள்ளது.

Advertisment

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ்சார் இங்குதான் இந்த ரூமில்தான் ஓய்வெடுப்பார்கள். அப்படித்தான் நேற்று (27:07:2020) சேகர் 5 மணி அளவில் ரூமில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்தார். அந்த சமையம் திடீர் என்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கின்றது. சத்தம் கேட்டு அங்கிருந்த அக்கம் பக்கத்தினர், அந்த ஓய்வறையில் வந்து பார்த்தபோது நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில் சேகர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்து கிடந்தார்.

போலீசார் விரைந்து வந்து சேகரின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விசாரணையில் சேகர் சுட்டு கொண்ட, அந்த துப்பாக்கியை கைப்பற்றினர். தற்கொலைக்கு முன்பு சேகர் ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளார், அந்த கடிதத்தை கைப்பற்றி பார்த்தபோது, அதில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுடிருந்தது தெரியவந்தது.

வீடு கட்ட 25 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதை கேட்டு வங்கியில் இருந்து தொடர்ந்து பணம் கட்ட சொல்லி அழுத்தம் கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக நாடே முடங்கியுள்ள நிலையில், கடன் தொகையை தற்போது கேட்க கூடாது என்று அரசு அறிவித்தும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வங்கிகள் கடன் தொகையை வசூல் செய்வதை நிறுத்தவில்லை. மனிதாபிமானம் இல்லாமல் வங்கிகள் நடந்து கொண்டதால் இதுபோன்ற தற்கொலைகள் நடக்கின்றது. ஒரு காவல் துறை உதவி ஆய்வாளருக்கே இந்தநிலை என்றால் சாமானிய மக்களின் நிலையை யோசித்து பார்க்கவும்.

Chennai incident decision police si bank loan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe