Advertisment

சித்தர் முறைப்படி பங்காரு அடிகளாரின் உடல் கோவில் வளாகத்திலேயே நல்லடக்கம்

The Bangaru Adigalar was cremated in the temple premises according to the Siddha tradition

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கிப் புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மாரடைப்பு காரணமாக நேற்று (19.10.2023) உயிரிழந்தார். அவரது மறைவு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

தமிழக முதல்வரின் அறிவிப்புப்படி அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு தொடங்கியது. 42 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் தமிழக ஆளுநர், அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் இருந்தனர். தொடர்ந்து அவரது உடல் கோவிலின் மைய மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு பின்னர் புற்றுக்கோவில் மண்டபத்தில் சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

saint Chengalpattu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe