ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்; வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்

07:37 AM Jan 04, 2024 | mathi23

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று (03-01-24) நள்ளிரவு இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 4.4 புள்ளிகளாகப் பதிவான முதல் நிலநடுக்கம் நள்ளிரவு 12:28 மணியளவில் பைசபாத்தில் இருந்து 126 கி.மீ கிழக்கு தொலைவில் 80 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து, நள்ளிரவு 12:55 மணியளவில் பைசபாத்தில் இருந்து 100 கி.மீ தென் கிழக்கு தொலைவில் 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அளவில் பதிவானது. அடுத்தடுத்து அரைமணி நேரத்திற்குள் ஏற்பட்ட இந்த இரண்டு நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று (04-01-24) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 1:12 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT