Advertisment

ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல்; தேதிகள் அறிவிப்பு!

Announcing Dates on The election will be held in seven phases

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகத்தகவல்கள் வெளியாகி இருந்தன.

Advertisment

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்தியத்தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில்தேர்தல் நடைபெற உள்ளது. 'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள், மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில், தமிழகம், புதுச்சேரி உள்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், கேரளா, கர்நாடகா உள்பட 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. குஜராத், சண்டிகர் உள்பட 94 தொகுதிகளுக்கு மே 7 ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து, நான்காம் கட்ட வாக்குப் பதிவானது, மே 13 ஆம் தேதி அன்று ஆந்திரப் பிரதேசம், பீகார், தெலுங்கானா உள்பட 96 தொகுதிகளுக்கு நடைபெறகிறது.

ஐந்தாம் கட்ட தேர்தலில், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர் உள்பட 49 தொகுதிகளுக்கு மே 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா உள்பட 57 தொகுதிகளுக்கு ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் உள்பட மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஏழு கட்டமாக நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

Election
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe