Advertisment

ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்! பதவியை விட்டு விலகுங்கள்: மு.க.ஸ்டாலின்

sta

நீங்கள் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும். பதவியை விட்டு விலகுங்கள் என முதல்வர் எடப்பாடியை பதவி விலகக்கோரி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

முதல்வரிடம் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறிவிட்டுதான் வெளிநடப்பு செய்தேன். ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் பங்கேற்றவர்களை சமூகவிரோதிகள் என முதல்வர் பொய் கூறியுள்ளார். சொந்த நாட்டு மக்களை சமூகவிரோதிகள் எனக்கூறும் முதல்வரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

Advertisment

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற ஏன் முதல்வர் செல்லவில்லை? நீங்கள் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்! பதவியை விட்டு விலகுங்கள். முதல்வர் பதவி விலகி டிஜிபி நீக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ops_eps Stalin DMK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe