Advertisment
நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் மூன்று ராஜ்ய சபா வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கலாம். அதன்படி, முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோரை அதிமுக சார்பாக தேர்ந்தெடுத்தனர். மீதமுள்ள ஒரு ராஜ்ய சபா சீட் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி, பாமகவிற்கு ஒதுக்கப்படுகிறது என அறிவித்தது. அதைத்தொடர்ந்து தற்போது அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை வேட்பாளராக பாமக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.