ttttt

Advertisment

தமிழக சட்டமன்ற தோ்தலின் இறுதி கட்ட சூறாவளிப் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலை 7 மணியோடு தோ்தல் பிரச்சாரங்கள் முடிவடையும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன் ஒருபகுதியாக திருச்சி திருவெறும்பூா் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து இன்று திருச்சி எம்.பி.சிவா தோ்தல் பிரச்சாரம் செய்தார்.

ttttt

கடந்த இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அன்பில்மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரத்திற்கு முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு பிரச்சாரத்திற்கு புறப்பட்ட அவா், இன்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போதே சற்று சோர்வாக காணப்பட்டுள்ளார்.

Advertisment

ttttt

அதிலும் கடுமையான காய்ச்சல் மற்றும், வெயிலின் தாக்கம் அவரை நிலைகுலைய வைத்து வேனில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போதே அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழும் நிலையில் பிரச்சார வேனில் நின்று கொண்டிருந்த கே.என்.சேகரன் அவரை தாங்க, கை தாங்கலாக மகேஷ் பொய்யாமொழியை அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனா்.

ttttt

Advertisment

உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்ததும், திமுகவினர், நீங்கள் வீட்டுக்கு போங்க, நாங்க பிரச்சாரத்தை பார்த்துக்கொள்கிறோம் என்று அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை, பிரச்சாரம் என இருந்ததால் சரியான தூக்கம், ஓய்வு இல்லாமல் இருந்தார். அதனால் ஏற்பட்ட சோர்வு காரணமாகத்தான் மயக்கம் ஏற்பட்டது. மற்றப்படி ஒன்றும் இல்லை என்றனர் உடனிருந்த திமுகவினர்.