Advertisment

எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது... டிடிவி தினகரன் உருக்கம்

ammk

'வெற்றி... வெற்றி' என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிறபோதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது என்று அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

Advertisment

தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான வெற்றிவேல் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன்.

Advertisment

மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் பேரன்பைப் பெற்றவர். என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர்.

என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன் என்று உறுதிப்படச் சொல்லி, இறுதிவரை கழகத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர்.

துரோகத்திற்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனிதப்போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர்.

'வெற்றி... வெற்றி' என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிறபோதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது.

வெற்றிவேலின் மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். நம்முடைய லட்சியப் பயணத்தில் வெற்றிவேல் என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

TTV Dhinakaran ammk Vetrivel ammk vetrivel
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe