சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. கடந்த 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு இந்த ஊரடங்கு நடைமுறை அமலில் இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதேபோல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி சென்னையில் அம்மா உணவங்களில் இலவச உணவு வழங்கப்படுகிறது. சென்னை பூக்கடை பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இலவச உணவு வாங்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/amma_unavagam_chennai_20.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/amma_unavagam_chennai_22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/amma_unavagam_chennai_21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/amma_unavagam_chennai_23.jpg)