Advertisment

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம் - ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அறிவிப்பு! 

  ops and eps

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Advertisment

அதில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் ஏ.முருகேசன் (நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisment

admk MLA ops eps
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe