காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியின் மனைவி, மகளுக்கும் கரோனா இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.