ஸ்ரீபெரும்புத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிக்கு (57 வயது) கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே கரோனாவால் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் எம்எல்ஏ பழனி கடந்த இரண்டு மாதங்களாக, ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்ததாக தகவல் கூறுகின்றன.