Advertisment

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மணடபத்தில் அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேடையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் மலர்தூவி மரியாதைசெலுத்தினர். அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும், இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 4500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

ADMK GENERAL MEETING IN CHENNAI

அதிமுக பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணிகள் கட்சிகள் வெற்றிக்கு உழைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம். மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி தீர்மானம், சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தல் உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisment

Chennai GENERAL MEETING AIADMK PARTY Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe