ADVERTISEMENT

புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக அமைப்பு செயலாளர்கள் யார் யார்?

09:31 PM Jul 25, 2020 | rajavel

ADVERTISEMENT

அதிமுக அமைப்பு செயலாளர்களாக 11 பேரை நியமித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன், திருப்பூர் மாநகர் மாவட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சி.சிவசாமி, திருநெல்வேலி மாவட்ட முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.புத்திச்சந்திரன், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் வி.மருதராஜ், தென்காசி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி. ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திருத்தணி கோ. அரி, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலாஜாபாத் பா.கணேசன், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஆசைமணி, திருநெல்வேலி மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் ஆகிய 11 பேர் அதிமுக அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT