actor vadivelu

Advertisment

நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து ஆகியோர் மீது தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் புகார் கடிதம் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ''நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும் நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த சில உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும்யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிறவாட்ஸ் அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிவுள்ளேன். ஏற்கனவே எனக்கும் சிங்கமுத்துவிற்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டிருப்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisment

ஆகையால் மனோபாலாவின் மீதும் சிங்கமுத்து மீதும்நடிகர் சங்க சட்ட விதி எண் 13இன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். நடிகர் வடிவேலுவின் புகார் நடிகர் சங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.