Advertisment

சசிகலா சிறையிலிருந்து வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்... கருணாஸ் பேட்டி!

actor karunas

அ.தி.மு.க.வில் பல தரப்பு கருத்து பிரதிபலிக்கப்படுகிறது, மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாவிற்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிக்கிறோம், முக்குலத்தோர் புலிப்படை வரும் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் என மதுரையில் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் பேட்டியளித்தார்.

Advertisment

தென்மாவட்டங்களில் இரு பிரிவினரிடைய மோதல் ஏற்படும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ் தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தார்.

Advertisment

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ்:விளம்பர நோக்கத்தில் இரு தரப்பினரிடையே பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீதும், அச்சகங்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். வரும் தேர்தலில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முக்குலத்தோர் புலிப்படை உதவியாக இருக்கும். வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கும் கட்சியிடம் 2 தொகுதிகள் கேட்கப்படும் என்றார்.

அ.தி.மு.க.வில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல தரப்பு கருத்துகள் பிரதிபலிக்கப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் எனவும், அ.தி.மு.க.வில் சசிகலா இடம்பெறுவது குறித்து கருத்துச் சொல்ல இயலாது என்றார்.

Ad

வேளாண்மையை அழிக்கும் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாவிற்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிக்கிறோம் எனவும், காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்த கேள்விக்கு ரஜினி ரசிகர்கள் பிறந்ததில் இருந்து போஸ்டர் ஒட்டிவருகிறார்கள், அவர் அரசியலுக்கு வந்தால்தான் எதுவும் சொல்லமுடியும், யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் மட்டும் தான் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் கொடிபிடிக்க ஒரு கூட்டம் உள்ளது என்றார்.

karunas actor karunas MLA
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe