Actor Dhanush-Aishwarya couple announces separation

Advertisment

நடிகர் தனுஷும், அவரது மனைவியும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம்.

இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம். தனுஷும், நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களைச் சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

Actor Dhanush-Aishwarya couple announces separation

அறிக்கையின் கீழே நடிகர் தனுஷ், ஓம் நமசிவாய என்றுகுறிப்பிட்டுள்ளார். அதேபோல், அன்பை பரப்பவும் என்று குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா, உங்கள் மீது எப்போதும் மிகுந்த அன்பு என்று குறிப்பிட்டு புன்னகைக்கும் எமோஜியுடன், கடவுளின் வேகம் என்று தெரிவித்துள்ளார்.

பிரபல ஜோடியான நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஏற்கனவே, நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவும் தனது முதல் கணவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியின் திடீர் அறிவிப்பால் திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.