தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!!

9 IPS officers transferred in Tamil Nadu

தமிழகத்தில் ஒன்பது ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு டி.ஐ.ஜி ஆசியம்மாள் உளவுத்துறை டி.ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த அரவிந்தன் குற்றப்பிரிவு சி.ஐ.டி, எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு பிரிவு சிஐடி-1, எஸ்.பியாக திருநாவுக்கரசு, பாதுகாப்பு சிஐடி-2,எஸ்.பியாக சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்.பி சரவணன் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு -2 எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் துறை நிர்வாகப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக எம்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி டிஜிபியாக ஷகில் அக்தர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக கந்தசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை (உள்நாட்டுப் பாதுகாப்பு) ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

IPS OFFICERS tn govt
இதையும் படியுங்கள்
Subscribe