Advertisment

மொட்டையடித்து ராகிங்; 7 சீனியர் மாணவர்கள் கைது

7 senior students arrested for ragging

கோவையில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவனை சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்து ராகிங் செய்ததில் ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. மது குடிக்க பணம் தராததால் முதலாம் ஆண்டு மாணவனை சீனியர் மாணவர்கள் ஏழு பேர் மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.

Advertisment

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் இதுகுறித்து கோவை பீளமேடு காவல்துறையில் புகார் கொடுத்திருந்தனர். அதன் பேரில் விசாரணையில் ஈடுபட்ட போலீசார், கல்லூரியில் பயின்று வந்த சீனியர் மாணவர்கள் மணி, மாதவன், வெங்கடேஷ், தரணிதரன், யாலிஸ், ஐயப்பன், சந்தோஷ் ஆகிய ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கல்வித்துறை சார்பில் ராகிங் போன்றவை நிகழக்கூடாது என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் பிரபலமான கல்லூரியில் மொட்டை அடித்து மாணவர் ராகிங் செய்யப்பட்டதும், அதனைத் தொடர்ந்து ஏழு சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

police college Coimbatore
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe