கோப்புப்படம்
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆற்றில் குளித்த ஐந்துகல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையாகவே நீர்நிலைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வரும்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் ஆற்றுப்பகுதிக்கு5 கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற நிலையில், ஆற்றில் இறங்கி குளிக்க முற்பட்டுள்ளனர். இதில் 5 பேரும்நீரில்மூழ்கியுள்ளனர். 4 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒரு மாணவனின் உடலை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.