Skip to main content

ஒவ்வொருத்தருக்கும் 25சி -தினகரன் எம்.எல்.ஏக்களை வளைக்கும் எடப்பாடி!!!

Published on 13/06/2018 | Edited on 13/06/2018
dinakaran

 

 

 

அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் 19பேர் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக கடந்த ஜனவரியில் தமிழக கவர்னரிடம் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சராக உள்ள எடப்பாடிமீது நம்பிக்கை இல்லை என்றும் வேறொருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்றும் மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில் முதல்வர்மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கவர்னரிடம் கொடுத்ததாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் 19பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதில் அதிமுக எம்.எல்.ஏ. ஜக்கையன் திரும்பவும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்ததால் அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு மீதியுள்ள 18பேரை தகுதி நீக்கம் செய்தார் சட்டப்பேரவைத் தலைவரான தனபால். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த ஜனவரி 23ல் நிறைவுபெற்று தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புதான் 14.6.2018 மதியம் உயர்நீதிமன்றத்தில் வழங்க உள்ளது.

 

 

இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 111பேர் ஆதரவாக உள்ளனர். தினகரன் அணியில் 4பேர் சுயேட்சையிலான தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் இருக்க திமுக கூட்டணியில் 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளார்கள். உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளிவரும் நிலையில் ஆளும் அதிமுக அரசான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி இதை எதிர்கொள்ள தீவிரமாக களம் இறங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த நான்கு மாதமாக தினகரன் அணியிலுள்ள 18பேரில் 8பேரை தங்கள் வட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளார்கள். இந்த திட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் அமைச்சர் தங்கமணி. 13ம் தேதியிலிருந்து தீர்ப்பு 14ம் தேதி வெளிவரும் என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து அமைச்சர் தங்கமணி நேரடியாக களத்தில் இறங்கி பேசவேண்டியதை பேசினார். தீர்ப்பு எப்படிவேண்டுமானாலும் வரலாம். ஒருவேளை 18எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு குறித்த சபாநாயகரின் உத்தரவு தவறு என வந்தால் ஆளுங்கட்சியான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தில் இறங்கிய தங்கமணி, புதன்கிழமை தினகரன் அணியிலிருந்த 8 எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்பில் உள்ளார். ஒவ்வொருவருக்கும் 25சி என பேரம் போயுள்ளது. இதில் வடமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணியின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளார். ஆக முதலமைச்சர் பதவியை தக்கவைக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி எடுத்த அஸ்த்திரத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எட்டுபேரை வளைத்துக்கொண்டுபோக அமைச்சர் தங்கமணி இரவு பகலாக செயல்பட்டுவருகிறார். தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் மீண்டும் எம்.எல்.ஏ.க்களாக தொடரவும் என்ற உத்தரவு வந்தால் அமைச்சர் தங்கமணியின் இந்த சித்து விளையாட்டு நடக்கும் என்கிறார்கள் அதிமுக ர.ரா.க்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.