Skip to main content

23 அரசு பணிகள் 4 கோடிக்கு விற்பனை... வெளிச்சத்துக்கு வந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு!!

Published on 09/02/2020 | Edited on 11/02/2020

டிஎன்பிசி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூபாய் 4 கோடிக்கு 23 அரசு பணிகளை விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது.

 

23 Govt Jobs Sold For 4 Crores ... TNPSC Selection Revealed !!


டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரிடம் 7 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் 23 அரசுப் பணிகளை 4 கோடிக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. தேர்வர்களிடம் ஜெயக்குமார் பணம் பெற்றுக்கொண்டு இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், முறைகேட்டுக்கு உதவியவர்களுக்கு பணத்தை பங்கிட்டுக் கொடுத்ததாகவும் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வில் முறைகேடு சம்பந்தமாக முக்கிய குற்றவாளிகளாக சிபிசிஐடி போலீஸார் கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய ஜெயக்குமாரை 7 நாட்கள் காவலில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல முறைகேட்டில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியாக கருதப்படும் ஓம்காந்தனையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இரண்டு பேரையும் ராமநாதபுரத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை இரண்டு மையங்களுக்கும் நேரில் அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த முறைகேடு எப்படி நடந்தது என்பது தொடர்பாக இருவரும் நடித்து காட்டி இருக்கிறார்கள். அந்த காட்சிகளையும் அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் 7 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணையில் 23 அரசு பணிகளை ரூபாய் 4 கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.