Skip to main content

அந்த 2000 கிலோ... நாய்க்கறியுமல்ல, ஆட்டுக்கறியுமல்ல... பார்சல் விவரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
meat

 

 

எழும்பூர் ரயில்நிலையத்தில் கடந்த வாரம் 2000 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இறைச்சி நாய் இறைச்சி என்ற சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து விசாரித்து வந்த அதிகாரிகள், பார்சல் விவரத்தை  சோதனை செய்துள்ளனர். அப்போது சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான், ஜோத்பூரில் இருந்து அனுப்பப்பட்டுள்ள இந்த பார்சலில் உள்ளே இருப்பது மீன் என குறிப்பிடப்பட்டு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடாக பார்சல் அனுப்பியதற்கு உடந்தை எனக்கூறி சென்னையைச் சேர்ந்த முகவர் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஜோத்பூருக்கு பயணப்பட உள்ளது. இதனால் சர்ச்சை வலுத்திருக்கிறது. முழுமையான அறிக்கை வெளியாக இன்னும் சிலநாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறைக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Chief Minister MK Stalin left for Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் தோட்டம் பால்பண்ணை என்ற பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (04.03.2024) காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார். இதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 4.15 மணியளவில் திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இன்று இரவு 8.15 மணியளவில் சீர்காழி ரயில் நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றடைகிறார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று இரவு ஓய்வெடுக்கிறார்.

அதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு கார் மூலம் மயிலாடுதுறை சென்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்நிகழ்வை முடித்துவிட்டு மதியம் 1 மணியளவில் திருச்சி – சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை வந்தடைகிறார். முதல்வரின் இந்த ரயில் பயணம் காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

Next Story

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாய் சடலம்; மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Dog carcass in drinking water tank; Again a sensational incident

ஒரு வருடத்திற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு ஆண்டை கடந்து தற்பொழுது வரை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதேபோன்று பொது இடங்களில் மனிதக் கழிவுகள் கலக்கப்படுவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அண்மையில் காஞ்சிபுரத்தில் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக பரபரப்பு புகார்கள் எழ, அந்த தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே நீர்த்தேக்க தொட்டியில் இறந்த நாயின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள துட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆட்டையான் வளைவு பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து அரசுப் பள்ளி மற்றும் ஐந்து கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல குடிநீர் ஆபரேட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி தண்ணீர் நிரம்பியுள்ளதா என்று சோதனை செய்தபோது அங்கு நாய் ஒன்று இறந்த நிலையில் நீரில் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தாரமங்கலம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.