லீக்கானது ரஜினியின் 2.0 பட டீசர்..! படக்குழு அதிர்ச்சி..!

2.0

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் டீசர் இணையதளங்களில் லீக்காகி உள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 2.0 மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கிறது. எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் 1.27 நிமிடம் கொண்ட டீசர் காட்சிகள் அதிகாரப்பூர்வ வெளியீடுக்கு முன்பே தற்போது இணையத்தில் வெளியாகி படக்குழுவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அந்த டீசரின் முடிவில் ரோபோ ரஜினிகாந்த் கண்ணாடியை உயர்த்தி குக்கூ என கூறுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது.

2.0 rajinikanth shankar
இதையும் படியுங்கள்
Subscribe