/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/veerappan.jpg)
கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தன கடத்தல் வீரப்பன் குழுவால் கடந்த 30. 7.2000 அன்று தாளவாடி அருகே உள்ள தொட்ட காஜனூர் கிராமத்திலிருந்து கடத்தப்பட்டு வீரப்பனால் பிணை கைதியாக காட்டுக்குள் வைக்கப்பட்டார். இந்த கடத்தல் வழக்கில் தமிழ் தீவிரவாதிகளான மாறன், அன்றில், ஏழுமலை உட்பட 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கடந்த 18 வருடமாக வழக்கு விசாரனை நடந்து வந்தது. அதன் தீர்ப்பு இன்று காலை கோபிசெட்டிபாளையம் அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அத் தீர்ப்பை வாசித்த நீதிபதி மணி, குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்ததோடு இவர்கள் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று கடுகளவு கூட போலீஸ் நிருபிக்கவில்லை என்றார்.
மேலும் அவர் ராஜ்குமார் வீரப்பன் பிடியில் இருந்த போது தமிழக கர்நாடகா அரசுகள் வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களை இரு மாநில அரசுகளின் தூதராக நியமித்து காட்டுக்குள் அனுப்பியது. அது பற்றியெல்லாம் எந்த குறிப்பும் இல்லை என்றார்.
வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமாரை மீட்க நக்கீரன் மேற்கொண்ட பயணத்தை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டது பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகி அவர்களுக்கு விடுதலை பெற்று தந்தவர் மூத்த வழக்கறிஞரான ப.பா.மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)