ADVERTISEMENT

சென்னையில் சிறுமி வன்கொடுமை: உயர்நீதிமன்ற வளாகத்தில் 17 பேருக்கு தர்ம அடி - உதை!

04:30 PM Jul 17, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


சென்னையில் 12வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள மகளிர் நீதிமன்ற பகுதியில் வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டனர்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12வயது காது கேளாத சிறுமியை மிரட்டி அந்த குடியிருப்பில் பணிபுரியும் 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளனர்.

ADVERTISEMENT


அதில் 66 வயதான ரவிக்குமார் என்ற லிஃப்ட் ஆப்ரேட்டர், அங்குள்ளவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு தனது மகளை கடந்த ஜனவரி மாதம் முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். மேலும், செல்போனில் சிறுமியை ஆபசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய அந்த நபர்கள், கத்தி முனையில் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறுமிக்கு நடந்த இந்த துயர சம்பவம் தற்போது தான் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும், அவர் பல நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் 25க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், லிப்ட் ஊழியர்கள், செக்யூரிட்டிகள், பிளம்பர்கள் என 17 பேர் குற்றத்தில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது போஸ்கோ சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.


இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 17 பேரையும் ஜூலை 31 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அவர்களை புழல் சிறையில் அடைக்க கொண்டு செல்லும்போது, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற பகுதியில் வழக்கறிஞர்கள் சிலர் 17 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT