100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்குக்கான ஊதியத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மூன்று மாத காலத்திற்கு இந்த நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வங்கிக்கணக்கில் நேரடியாகப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில்,தற்போது புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.