தமிழக வெற்றிக் கழக விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளராக குணா.சரவணன் இருந்த வருகிறார். இவர் செஞ்சி மேல்மலையனூர் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்களை நியமிக்க கட்சி தலைமைக்கு சிபாரிசு செய்ததாகவும், அதேபோன்று கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்ய தொடர்ந்து பணம் பெறுவதாக புகார் இருந்து வந்தது. இந்நிலையில் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் வெளியே வந்த முன்னாள் மேல்மலையனூர் ஒன்றிய கிழக்கு துணைச் செயலாளர் சரண் விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளர் குணா.சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/15/a4413-2025-07-15-08-17-09.jpg)
என்னை ஏன்டா கட்சியில இருந்து எடுத்தீங்க விஜய்க்காக தாண்டா கட்சியில இருக்கேன். முப்பதாயிரம் ரூபாய் பணம் வாங்கினீங்க, ஏன் பொறுப்பிலிருந்து எடுத்திங்க திருப்பி கொடுங்கடா' என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சரண். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் வடமேற்கு மாவட்ட செயலாளர் குணா சரவணனை கட்சியினர் அவரது அலுவலகத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/15/a4416-2025-07-15-08-16-27.jpg)
விழுப்புரம் வடமேற்கு மாவட்ட மகளிரணி பொறுப்பாளராக பதவி வகித்து வரும் ரோஸ்லின் அளித்த பேட்டியில், 'மாவட்ட கழக செயலாளர் குணா.சரவணன் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்றும் பாதுகாப்பு அளிப்பதில்லை என்றும், முகம் சுளிக்கும் வண்ணமாக பேசி வருவதாகவும், இவர் தொடர்ந்து இதுபோன்று செயலில் ஈடுபட்டு வருவதால் நாங்கள் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரை சந்தித்து இரண்டு முறை புகார் மனு அளித்தும் இதுவரைக்கும் தலைமை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நீ யாரை சென்று சந்தித்தாலும் கடைசியில் என்னை தான் வந்து சந்தித்தாக வேண்டும் என்று முகம் சுளிக்கும் வண்ணமாக பேசுகிறார்.
நாங்கள் விஜய் அண்ணனை நம்பி தான் இந்த கட்சியை செயல்படுத்துகிறோம். என்னை நம்பி 100 பெண்கள் இருக்கின்றனர், எனக்கே பாதுகாப்பு இல்லாத போது என்னைப் பின் தொடர்ந்து இருக்கும் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். அவர் எங்களை மதிப்பதில்லை முகம் சுளிக்கும் வண்ணமாக பேசுகிறார். பணம் கொடுத்தால்தான் கட்சியில் பதவி என்று மிரட்டுகிறார். மேலும் மாவட்ட மகளிர் அணி பொறுப்பிற்காக ரூபாய் 5000 பணம் கொடுத்த பிறகு தான் எனக்கு மகளிர் அணி பொறுப்பாளர் என்ற பொறுப்பை வழங்கி உள்ளார்கள் என ரோஸ்லின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இச்சம்பவம் செஞ்சி, மேல்மலையனூர் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் மாநில நிர்வாகியான ஆதார் அர்ஜுனா புகைப்படத்தை போட்டு பேனர் வைத்த நிர்வாகி ராஜதுரைக்கு விழுப்புரம் வடமேற்கு மாவட்ட கழக செயலாளர் வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி ராஜதுரை அந்த பேனரை உடனடியாக கிழித்து போடுங்கள் இல்லையென்றால் என் ஃபோட்டோ எடுத்துட்டு வைக்க சொல்லு இல்லையென்றால் அவர் பெயரில் SHOULD BE FIELD FIR என கூறுகின்றார்.
கட்சி ஆரம்பித்து ஒன்றரை ஆண்டு காலம் நிறைவேறாத நிலையில் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு அவ்வபெயர் உண்டாக்கும் விழுப்புரம் வடமேற்கு மாவட்ட கழக குணா. சரவணன் மீது தலைமைக்கு புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தவெகா நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.