முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று  கொண்டாடப்பட இருக்கிறது. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

Advertisment

முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில்,'அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, “பள்ளியில் கல்வி தான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!' என தெரிவித்துள்ளர்.

Advertisment

அதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'திரு கே. காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப்  போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடு24ம் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்' என தெரிவித்துள்ளார்.