தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.

Advertisment

சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் கட்சி அலுவலகம் திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட செங்கோட்டையன் பேசுகையில், ''தவெக தலைவர் விஜய்யின் எதிர்காலம் பிரகாசம் உள்ள எதிர்காலமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை எங்களால் காணமுடிகிறது. குறிப்பாக இல்லங்கள் தோறும் கேட்டால் 2 கோடியே 17 லட்சம் குடும்ப அட்டை வைத்திருக்கும் இல்லங்களில் ஒவ்வொரு இல்லங்களிலும் விஜய்யின் குரல் ஒலிக்கிறது. மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவில் விஜய் சிறப்பாக உரையாற்றினார். இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையாக மாநிலாமாக திகழ்வதற்கு முழுமையாக நின்று பணிகளை ஆற்றி வருகிறார். மாற்றம் வரவேண்டும் என்பதற்காக 500 கோடிக்கு மேலே வரும் வருமானம் கூட தேவையில்லை என நல்லாட்சி நடத்துவதற்காக விஜய் வந்துள்ளார்'' என்றார்.