'He is expecting the tour to open a new alliance with the money he has received' -Panneerselvam attacks Anbumani Photograph: (dmk)
சிதம்பரத்தில் 'தமிழ்நாடு தலைகுனியாது, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தினமும் மக்களை சந்தித்து எவ்வாறு பேச வேண்டும், திமுக அரசு செய்த சாதனைகள் குறித்து வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களையும் சந்தித்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதில் தொகுதி பொறுப்பாளர் பாரிபாலன், மாநிலபொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு.சந்திரசேகரன், நகரத் துணைச் செயலாளர்கள் இளங்கோவன், பாலசுப்பிரமணியன், நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள், ஒன்றிய செயலாளர்கள் மனோகர், சங்கர், முத்து பெருமாள், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, நகராட்சி கவுன்சிலர் இந்துமதி அருள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ''தேர்தல் நெருங்கி வருவதால் அந்தந்த கட்சி காரர்கள் பிரச்சனைகளை தூண்டிவிடுவார்கள். மழை பாதிப்பு குறித்து தற்போது கணக்கெடுப்பு நடந்து வருகிறது. முழு கணக்கீடு வந்த பிறகு அதற்கான நிவாரணம் வழங்கப்படும். கடந்த ஆட்சியில் எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை அது அனைவருக்கும் தெரியும். மக்கள் போராடினார்கள் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது அந்த ஆட்சியில் நடைபெற்றது.
அன்புமணி வாங்குன காசுக்கு கூட்டணிக்கு கதவு திறக்குமா திறக்காதா எதிர்பார்க்கிறார். தேர்தல் வருவதால் நாங்கள் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக அவர்கள் சொந்த பிரச்சினைகளை மறைப்பதற்கு பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தோற்றவர்கள் நாலா பக்கமும் நடந்து பேசி வருகிறார்கள். மக்களுக்கு அது நன்றாக தெரியும்.
இட ஒதுக்கீடு கொடுத்தது கலைஞர் தான். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய 21 பேரை சுட்டுக் கொன்றார்கள். அந்த குடும்பத்தினருக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மத்திய அமைச்சராக இருந்தபோது எந்த ஒரு வேலை வாய்ப்பும், உதவியும் வழங்கவில்லை. தற்போது திமுக அரசுதான் அவர்களுக்கு மணிமண்டபம் உள்ளிட்ட அவர்களின் குடும்ப வாழ்வாதரத்தை உயர்த்தி வருகிறது'' என்றார்.
சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் மனோகர் தலைமை தாங்கினார். மாவட்ட ஓட்டுனர் அணி துணைச்செயலாளர் சுப்பு என்கிற வெங்கடேசன், ஒன்றிய துணைச்செயலாளர் இளவரசு, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாரிபாலன் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட திமுக அரசின் சாதனைகள் குறித்து பேசினார். இதில் விளையாட்டு மேம்பாட்டு அணி அருண்குமார், நிர்வாகிகள் பாண்டியன் உள்ளிட்டவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Follow Us