Advertisment

“தீய சக்திகளை அழிக்க உலகத்திற்கு ஒளியாய் வந்தார்” - குட்டிக் கதை சொன்ன இ.பி.எஸ்.!

eps-mic-4

சென்னை கீழ்பாக்கத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசுகையில், “கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் நன்நாளில் ஏசு 2000 ஆண்டுகளுக்கு முன்னாலே போதித்த போதனைகள் இன்றைக்கும் நமக்கு பயனுள்ளதாக இருப்பதை நினைத்து பார்க்க வேண்டும். இயேசு பிரான் அவர்கள் தீய சக்திகளை அழிக்க உலகத்திற்கு ஒளியாய் வந்தார். தீய சக்தியாக இருப்பவர்களை ஒளியின் வேஷம் தரித்தவர்கள் என்றும் மக்கள் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 

Advertisment

ஏசு சொன்ன கருத்தை விளக்க ஒரு கதை ஒன்றை கூற விரும்புகின்றேன். ஒரு ஊரில் ஒரு விவசாயி தனது விளைநிலங்களின் அருகில் ஒரு ஆட்டு பண்ணையை வைத்து நிறைய ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த ஆடுகளை கண்காணிக்க மேய்ப்பவர்களையும் காவலாளிகளையும் நியமித்தார். நல்ல பராமரிப்பில் ஆடுகள் நன்கு வளர்ந்தன. இதை பார்த்த சில ஒநாய்கள் எப்படியாவது இந்த ஆடுகளை கவர்ந்து சென்று நமக்கு இரையாக்க வேண்டும் என திட்டமிட்டன. ஆனால் காவலாளியின் கண்காணிப்பு கடுமையாக இருந்தது. எனவே ஓநாய்கள் ஆடுகளை கவர்ந்து செல்ல முடியவில்லை. எனவே ஓநாய்கள் தந்திரமாக ஆடுகளை கவர்ந்து சென்று இறையாக திட்டமிட்டன. 

Advertisment

ஒரு நாள் இரவில் ஓநாய்கள், ஆட்டு தோலை தங்கள் மேல் போர்த்திக்கொண்டு கள்ள வாசல் வழியாக உள்ளே வந்து தாங்களும் ஆடுகள்தான் என்பதை போல நடித்து அப்பாவி ஆடுகளை நம்ப வைத்து தந்திரமாக அவைகளை அழைத்துச் சென்று தங்களுக்கு இரையாக்கி விட்டன அந்த அப்பாவி ஆடுகள் தாங்கள் ஓநாயிக்கு இறையாகும் போதுதான் அந்த ஓநாயின் சுயரூபத்தை அறிந்து ஐயோ மோசம் போயிட்டுமே என வருந்தினர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை காலம் கடந்த ஞானயோதயத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை” எனப் பேசினார். 

ed-vijay-speech

முன்னதாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (18.12.2025) நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி இந்த திமுகவை காலி செய்தார்கள். ஏன் இவ்வளவு கோபத்தோடு அவர்களைத் திட்டுகிறார்கள் என நான் கூட யோசிப்பேன். அவர்கள் இருவரும் சொன்னதை நானும் திருப்பி சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி. திமுக ஒரு தீய சக்தி. த.வெ.க. ஒரு தூய சக்தி. தூய சக்தி. த.வெ.க.வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் இடையில் தான் போட்டியே. மக்கள் விரோத சக்தி திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் தான் முடியும்” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

admk Chennai christmas edappadi k palaniswami kilpauk story
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe