ஹரியானாவில் 360 கிலோ வெடிபொருட்களுடன் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

ஹரியானாவில் மருத்துவக் கல்லூரியில் வெடிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டெல்லி ஃபரிதாபாத்தில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரியில் இந்த சோதனை நடைபெற்றது. அப்பொழுது ஒரு ஏகே 47 துப்பாக்கியும், 8 குண்டுகள்,  360 கிலோ வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

a5721
Haryana incident- the capital in shock Photograph: (delhi)

இதில் அதீல் அகமது ராதர் என்ற மருத்துவர், முசாமில் ஷகீல் என்ற மருத்துவர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேட்டரியுடன் 20 டைமர்கள், 24 ரிமோட்டகள் கைப்பற்றப்பட்டதால் வெடிகுண்டு தாக்குதலுக்கான முயற்சியா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்திற்குள் வெடிபொருட்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டது  என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் காஷ்மீரில் இருந்து ஹரியானாவிற்கு இந்த வெடி மருந்து கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. சாதாரணமாக துணி எடுத்து வரும் சூட்கேசில் இருந்து 360 கிலோ வெடி மருந்து கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. யார் மூலம் இந்த வெடிமருந்து கிடைக்கப்பெற்றது எதற்காக மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தலைநகரை அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது. 

Advertisment