கள்ளக்குறிச்சியில் வெங்காய வியாபாரியின் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராவத்தநல்லூர் அடுத்துள்ள மானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயுப்கான். வெங்காய வியாபாரம் செய்து வரும் இவர் தன்னுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்து இருந்தார். தொடர்ந்து சிகிச்சையில் அவருடைய மனைவி இருந்ததால் மருத்துவமனையில் ஆயுப்கான் இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் வீடு பூட்டியே கிடந்தது.

Advertisment

வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல அதே கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அத்தண்டமருதூர் பகுதியில் வனிதா என்பவர் கோவிலுக்குச் சென்ற நிலையில் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. கள்ளக்குறிச்சியில் தொடர்ச்சியாக இரண்டு வீடுகளில் நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருக்கும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.