தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரான எச். ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது, “கரூரில் நடந்த சம்பவம் என்பது துரதிர்ஷ்டவசமானது. எப்போதுமே ஒரு கூட்டம் நடத்துவது குறித்து பார்த்திருக்கிறீர்கள். மதுரையில் இந்து முன்னணி மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கீழே ஒரு சின்ன குப்பை பாக்கெட் கூட விழுந்தது கிடையாது. இந்து முன்னணியினர் தொண்டர்கள் நாற்காலிகள் எல்லாம் ஒன்றுபடுத்தினர். இந்த மாதிரி எப்போதும் கட்சியில் கட்டுப்பாடுகளை வைத்து அதன் அடிப்படையில் கட்சியை வளர்த்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை தற்போது தப்பு தான். ஆனால் நிர்வாகம் என்ன செய்கிறது?. காவல்துறை என்ன பன்னிருக்கு?.ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் தகுந்த அளவிற்கு போலீஸ் பாதுகாப்பை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் யாரும் இருந்ததாக தெரியவில்லை.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது எப்படி நடந்தது, காரணம் என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் மாநில அரசாங்கமும் ஒரு ஜூடிசியல் என்கொயரி ஆர்டர் செய்துள்ளது. இதில் கவனிக்க வேண்டியது ஒரே இடத்தில் பல பிணங்கள் இருக்கிற மாதிரி ஊடகங்களில் படம் வந்து இருக்கு. அப்போ அவ்வளவு பேரை ஏறி மிதித்துக் கொன்றது யார்? ஏதாவது அவுட்சைடு ஏஜென்சியா? சதியா? இல்ல இயல்பாக நடந்த விபத்தா? என்பது குறித்து மாநில அரசும் அதனுடைய அறிக்கையில் குறிப்பிட வேண்டும். ஜூடிசியல் கமிஷன் குறிப்பாக இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சி.பி.ஐ. விசாரணை? முதலில் இது வரட்டும். ஃபர்ஸ்ட் ரிப்போர்ட் நிச்சயமாக அடுத்து என்ன கோரிக்கை வைக்கலாம் என்று பார்க்கலாம்” எனத் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள், “காவல்துறை தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார் உங்களுடைய பதில் என்ன?” எனக் கேட்டனர். அதற்கு அவர், “இவ்வளவு கான்கிரிகேஷன் இருக்குனா காவல்துறை என்ன செய்து இருக்கு. ஏற்கனவே கரூர் எஸ்.பி. சரியாக முறைப்படி செயல்படுவதில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு ஏன் என்று சொன்னால் பக்கத்தில் இருக்கிற பேரூராட்சியில் 15வது வார்டில் 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை. என்று ஒரு நபர் தி.மு.க.வை சேர்ந்த முஸ்லிம் கவுன்சிலர் லேடி கவுன்சிலர் கேட்கிறார். தண்ணீர் வரவில்லை என்றால் எனக்கு என்ன தெரியும் எப்போதுமே லேடி கவுன்சிலர் என்றால் சீட்டில் உட்கார்வது அவரது கணவராக இருப்பார்.
நீங்கள் ஒரு கவுன்சிலர் இது பற்றி தெரியாதா என்று கேட்டுள்ளார். அந்த கவுன்சிலருடைய கணவர் இரண்டு மச்சினர் மாமனார் நாலு பேரும் சேர்ந்து அந்த ஒரு நபரை வெளியில் இழுத்து போட்டு மிதித்ததில் 70% ஹார்ட் பம்ப் ஆகா முடியாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர் ஆஸ்பத்திரியில் காப்பாற்ற முடியாது என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் நான் போன் செய்து ஏன் இது சம்பந்தமாக இன்னும் எஃப்.ஐ.ஆர். செய்யவில்லை என்று கேட்கிற வரை எஸ்.பி. எஃப்.ஐ.ஆர்.ஐ போடவில்லை ஏன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது கலெக்டர் அறிக்கை அனுப்பியிருக்கார் அவருக்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்று எஃப்.ஐ.ஆர் ரெஜிஸ்டர் செய்யவில்லை” என்றார். பேட்டியின் போது தென்காசி மாவட்ட பா.ஜ.க.வின் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.