Gutka being sold in broad daylight in Chennai Photograph: (CHENNAI)
ராயபுரத்தில் பட்டப்பகலில் கடைக்கு வெளியே வைத்து தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. அதேநேரம் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களில் குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வதை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயபுரம் சிங்காரத் தோட்டம் மூன்றாவது தெருவில் மூடப்பட்ட ஒரு கடைக்கு வெளியில் படிக்கட்டில் சிறிய மூட்டையில் தடை செய்யப்பட்ட பான் மற்றும் குட்கா பொருட்களை வைத்து விற்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குட்கா விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Follow Us