Guidelines for removing caste names - Government Order issued Photograph: (tngovt)
தமிழ்நாட்டில் தெருக்கள் மற்றும் குடியிருப்புகள், சாலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு குடியிருப்புகள், தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு சாதிப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பெயர்களே நடைமுறையில் இருந்து வரும் நிலையில் அதனை நீக்க வேண்டும் என்ற கருத்துக்கள் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் தற்போது குடியிருப்புகள், தெருக்கள், நீர்நிலைகள் மற்றும் சாலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. சாதிப் பெயர்களில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு மாற்றுப் பெயர்களாக, திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தமிழ் தலைவர்களின் பெயர்களை வைக்கலாம்.
அதேபோல் நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை போன்ற பூக்களின் பெயர்களை அல்லது மரங்கள், இயற்கை அமைப்புகள், வரலாற்று அடையாளங்கள் அடிப்படையிலான பெயர்களை பயன்படுத்தலாம் என அரசு பரிந்துரைத்துள்ளது. ஆதிதிராவிடர் காலனி, ஹரஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் பொது கட்டமைப்புகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க மற்றும் அதற்கான மதிப்பாய்வு செய்வதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.