வேலூர் மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றிவந்த உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினரை கூண்டோடு பணியிடம் மாற்றம் செய்து வேலூர் மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார். (வழக்கமான பணியிட மாறுதல் என கூறப்பட்டுள்ளது)
வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி காவல் ஆய்வாளராக இருந்த விக்னேஷ் வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கும், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி காவல் ஆய்வாளராக இருந்த சிவச்சந்திரன் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் வேலூர் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் விரிஞ்சிபுரம் காவல் நிலைய உதவியாளர் ஜெகதீசன் உட்பட வேலுார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவை சேர்ந்த 9- உதவி காவல் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், வேலூர் மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய 28 காவல்துறையினர் கூண்டோடு மாற்றம் செய்து மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.