ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி செல்லும் ரோட்டில் தாசளியூர் விரைவில் அந்தியூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அந்தியூரில் இருந்து லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி லாரியில் இருந்த டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது டிரைவர் முன்னுக்கு பின் முரணாகப் பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்ய முயன்ற போது திடீரென லாரி டிரைவர் லாரி இருந்து குதித்து தப்பி ஓடினார். போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சட்டவிரோதமாக 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/16/a5855-2025-12-16-23-39-38.jpg)