Advertisment

மரப்பெட்டியில் அழுகிய நிலையில் மூதாட்டி சட@ம்- பேரன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

5942

Grandson's shocking confession about old woman lose their live Photograph: (cuddalore)

கடலூரில் மரப்பெட்டியில் அழுகிய நிலையில் மூதாட்டியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் வி.காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணி மனைவி சின்னப்பொண்ணு (75). இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் செவ்வாய் கிழமை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 

Advertisment

வீட்டில் இருந்த மரப்பெட்டியில் உடல் அழுகிய நிலையில் மூதாட்டி சின்னப்பொண்ணு  கிடந்துள்ளார். போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கடலூர் டிஎஸ்பி தமிழ் இனியன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்  வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பல்வேறு இடங்களில் கைரேகை பதிவுகளை எடுத்துச் சென்றனர்.

மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்நிலையில் சின்னப்பொண்ணுவின் பேரன் (மூன்றாவது மகன் சுப்ரமணியனின் மகன்) ராஜப்பிரியனை (18) போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கடந்த 27ம் தேதி மதியம் ராஜப்பிரியன், சின்னபொண்ணுவிடம்  மது குடிக்கப் பணம் கேட்டதாகவும், அவர் பணம் கொடுக்க மறுத்தால் ஆத்திரத்தில்  சொம்பால் அடித்து  கொலை செய்து மரப்பெட்டியில் மறைந்து வைத்துவிட்டு வந்து விட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cuddalore Investigation old lady police TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe