சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டங்களை வழங்கினார்

Advertisment

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை இரு வேலை பாடப்பிரிவுகளாக  4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

Advertisment

இந்தக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளதால் பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பட்ட சான்றுகளை மாணவர்களுக்கு வழங்கும் விதமாக பட்டமளிப்பு விழா சி.முட்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் அர்ஜுனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க. ரவி கலந்து கொண்டு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட 14 துறைகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டச்சான்றுகளை வழங்கினார்.

அப்போது அவர் மாணவர்கள் மத்தியில்  பேசுகையில் கல்வியின் முக்கியத்துவம், பட்டங்களை பெற்று அடுத்த நிலைக்கு மாணவர்கள் செல்ல என்ன செய்ய வேண்டும், எளிய நிலையில் உள்ளவரை கல்வி எவ்வாறு உயர்த்தியுள்ளது என்பது குறித்து எளிமையாக புரியும் வகையில் விழா பேருரை ஆற்றினார்.

Advertisment

விழாவில் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், கணினி பயிற்சி திட்ட ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.