சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இலக்கியா ஸ்ரீ (21). சேலம் மாவட்டம் செல்லத்தாம்பட்டியைச் சேர்ந்த திருநம்பியான கார்த்திக்(21) என்பவரும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
ஒரே கல்லூரியில் இருவரும் இளங்கலை படித்த போது இவர்களுக்குக்குள் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் இலக்கியா ஸ்ரீ மற்றும் கார்த்திக் வீட்டுக்கு தெரிய வந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சுயமரியாதை திருமண நிலையத்தில் திராவிடர் கழக கோபி மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான சென்னியப்பன் முன்னிலையில் சுயமரியாதை திருமண உறுதிமொழி எடுத்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருநம்பியை திருமணம் செய்த பட்டதாரி பெண்ணுக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.